வர இருக்கும் மாகாணசபைத் தேர்தலுக்காகவே சிவில் சமுக அமைப்புகளால் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
அரசியல் என்பது சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலே அமைய வேண்டும். ஆனால் தற்போது சிவில் போராட்டங்களில் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
பிரேமதாஸா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இறந்தவர்களுக்கு இப்போது தான் யுத்தக் காப்பீடுகள் வழங்கப்படுகின்றன.
எமது மாவட்டத்தில் பல படுகொலைகள் இடம் பெற்றது அவரது காலத்தில் தான். ஆனால் அவரது மகனுக்கு எமது அரசியல்வாதிகள் சிலர் வாக்குச்சேகரித்து கொடுத்தார்கள்.
அந்தக் காலத்தில் இடம்பெற்ற வன்செயலுக்கு நாம் இப்போது நஷ்டஈடு வழங்குகிறோம் என்றார்.