கோவிட் தடுப்பூசி பெற்ற இருவர் கம்பஹாவில் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டதால்தான் உயிரிழந்தார்கள் என்று வெளியாகும் தகவல்களில் உண்மை கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தடுப்பூசி பெற்றதன் பின்னர் ஏற்படுகின்ற உடல் நிலை மாற்றம், பக்கவிளைவுகள் பற்றி விசாரணை மற்றும் ஆய்வுகளை நடத்த சர்வதேச மட்டத்திலான முறைமையொன்று உள்ளது. அதற்கமைய நாங்களும் நடவடிக்கை மேற்கொள்கின்றோம். பரிசோதனைகளின் முடிவு வெளிவரும்வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதனால் ஏற்பட்ட மரணமாக இது கருதமுடியாது என்பதே எங்களது கருத்து” என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.