மட்டக்களப்பு எருவில் பகுதியில் நெசவு உற்பத்தி கிராமம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது


batticaloa

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் அடிப்படையில் சௌ பாக்கியா உற்பத்தி கிராமங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் எருவில் பகுதியில் நெசவு உற்பத்தி கிராமம் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது,

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இப் பிரதேச அபிவிருத்தி குழுவின் உதவி தலைவர் பரமசிவம் சந்திரகுமார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு சம்பிரதாய பூர்வமாக இந்த நெசவு உற்பத்தி கிராமத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் உட்பட பல அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் உற்பத்தியாளர்களும் இதில் கலந்து கொண்டனர் .மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் எருவில் தெற்கு பகுதியில் இந்த நெசவு உற்பத்தி கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனூடாக நெசவுக் கைத்தொழிலை வளர்ச்சி பெறச் செய்வது உடன் இப்பிரதேச மக்களின் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கும் உற்பத்தியாளர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதும் இந்த விசேட திட்டத்தின் நோக்கமாகும். இந்த நெசவு உற்பத்தி கிராமத்தில் உற்பத்தியாளர்கள் வருவோருக்கு உற்பத்தியாளர்கள் ஆக வருவோருக்கு பல்வேறு உதவித் திட்டங்களை வழங்கவும் பல்வேறு வங்கி உதவி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார் .

Battinatham.com
புதியது பழையவை