வடக்கு கிழக்கில் மூன்றாவது நாளாக தொடர்கின்றது உண்ணாவிரதம்


Batticaloa
 இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (5) முன்னெடுக்கப்படுகிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீநேசன் , பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பெருமளவானோர் ஆதரவு வழங்கிவருகின்றனர்.


புதியது பழையவை