இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடர்பான எவ்வித அச்சுறுத்தலும் காணப்படவில்லை என்றாலும் மக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
எனினும் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கை தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சியடைவதாக கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டின் போது எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாததால் ஜனவரி பிற்பகுதியிலும் பெப்ரவரி மாத தொடக்கத்திலும் தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
எனவே அனைத்து மக்களும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கோரிக்கை விடுத்துள்ளார்.