இராணுவ மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசி பெற மறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மூவர் இன்று தடுப்பூசியை பெற நாரஹென்பிட்டியில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்தன், சாணக்கியன் ராசமணிக்கம் ஆகியோருக்கே இன்று தடுப்பூசி போடப்பட்டது.
இராணுவ மருத்துவமனைகளில் தடுப்பூசி போடலாமா வேண்டாமா என்பது
கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இது தனிப்பட்ட விருப்பம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
அந்த வகையில் சுமார் 125 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.