மட்டக்களப்பு வெருகல் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட ஆறு உழவு இயந்திரங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் சாரதிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம் என்.ஐ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவர்கள் எதிர்வரும் 21 ஆந் திகதியன்று வாகரை நீதிமன்றில் ஆஜராகவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமைக்காரியாலய பொலிஸாரும் வாகரை பொலிஸாரும் இணைந்து இச் சட்விரோத நடவடிக்கையினை முறியடித்துள்ளனர்.
அனுமதிப்பத்திரம் பெறப்படாமை மற்றும் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியமை இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களாகும்.