ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் நேற்றைய தினம் இவ்வாறு நீரில் மூழ்கியிருந்தனர்.
களுபஹன – வெலிஓய பகுதியில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற நிலையிலேயே அவர்கள் நீரிழ் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
மஹரகமைப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய தந்தையும், 14 வயதுடைய மகனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்
இதேவேளை, அவர்களுடன் இணைந்து நீரில் மூழ்கியிருந்த மேலும் இரண்டு பேர் நேற்றைய தினம் உயிருடன் மீட்கப்பட்டனர்.
அத்துடன், காணாமல் போயிருந்த இருவரையும் மீட்பதற்கான பணிகளில், இராணுவ உத்தியோகத்தர்களும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது