இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 580 பேர் உயிரிழப்பு!


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 580 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாத்திரம் ஐந்து வீதி விபத்துகள் பதிவு செய்யபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்திலேயே நாட்டில் அதிகளவான வீதி விபத்துகள் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
புதியது பழையவை