கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணித்தியாலத்தில் 95 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமணையினால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 மணித்தியாலத்துக்குள் தெஹியத்தக்கண்டிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 29 பேரும், உகன சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 18 பேரும், அம்பாறை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 10 பேரும், திருகோணமலை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 10 பேரும், மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 05 பேரும், செங்கலடி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 04 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், வவுனதீவு, களுவாஞ்சிக்குடி ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் தலா 03 பேரும், தமன, கந்தளாய் மற்றும் ஓட்டமாவடி ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் தலா 02 பேரும், பொத்துவில், லகுகல, வாழைச்சேனை, காரைதீவு, கல்முனை வடக்கு, கிண்ணியா, கொமரன்கடவல ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் தலா 01 பேருமாக, மொத்தம் 95 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பாறை, மட்டக்களப்பு, கந்தளாய், தெஹியத்தக்கண்டி, உகன, திருகோணமலை, உப்புவெளி ஆகிய 07 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் மிகவும் அவதானத்துக்குரிய பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,505 பேரும், அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 483 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,037 பேரும், திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,188 பேரும் அடங்கலாக கிழக்கு மாகாணத்தில் 4,213 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளனர்.