பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கடந்த பெப்ரவரி 3, ம் திகதி நீதிமன்ற தடைஉத்தரவை மீறியதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு எதிராக கல்முனை பொலிசார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 30, ம் திகதி கல்முனை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது அதற்கான நீதிமன்ற கட்டளை கொக்கட்டிச்சோலை பொலிசாரால் 27ம் திகதி அரியநேத்திரன் வீட்டில் சென்று கையளித்தனர்.
27/04/2021, மாலை 6, மணிக்கு கொக்கட்டிச்சோலை பொலிசாரால் எதிர்வரும் 30/04/2021, கல்முனை நீதிமன்றில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி தொடர்பான நீதிமன்ற கட்டளையை நான் மீறியதாக கல்முனை பொலிசாரால் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான நீதிமன்ற கட்டளை கையளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களான த.கலையரசன், கோ. கருணாகரம்,இரா.சாணாக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஷ்வரன், அம்பாறை மாவட்ட இலங்கை்தமிழரசு கட்சி வாலிபர் அணி தலைவர் நிதர்சன், தமிழ்மாணவமீட்பு அணி தலைவர் கணேஷ் ஆகிய ஏழுபேருக்கு எதிராக கல்முனை பொலிசார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.