பதுளை பசறை நகரில் இன்று காலை கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் முகம் கத்தியால் வெட்டப்பட்டுள்ளதுடன் அவர் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகஸ்தர் நகரில் கடமையில் ஈடுபட்டிருந்த போது, பெட்டி கடை ஒன்றை நடத்தி வரும் நபர் எனக் கூறப்படும் வர்த்தகர், பொலிஸ் உத்தியோகஸ்தரின் முகத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.
இத் தாக்குதலில் படுகாயமடைந்த, அவர், பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகஸ்தரின் முகத்தை கத்தியால் வெட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.