அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் (13/04/2021) இன்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது வெலிவோறியன் கிராமத்திலுள்ள எம்.எஸ் காரியப்பர் வித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் கலாபூசணம் மீரா.எஸ். இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது புதிய நிர்வாகக் குழுவில் மருதமுனையைச் சேர்ந்த கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் தலைவராகவும், சம்மாந்துறையைச் சேர்ந்த
ஏ.ஜே.எம்.கனிபா செயலாளராகவும், கல்முனையைச் சேர்ந்த யூ.எல்.எம்.இஸ்ஹாக் பொருளாளராகவும், சிரேஷ்ட ஆலோசகர்களாக கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன், கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் எம்.எல்.எம்.ஜமால்டீன் என முன்னைய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உட்பட அனைவரும் ஏகமானதாக முன்னைய தலைவரின் தத்துணிவுக்கு கட்டுப்பட்டு அனைவரின் சம்மதத்துடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.