பகல் நேரங்களில் மணல் கொண்டு செல்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ், நகர எல்லைக்குட்பட்ட வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.
இது தொடர்பிலான இறுதி தீர்மானம், அடுத்த வாரம் எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
மணல் கொண்டு செல்லும் லொறிகளினால் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் வாகன விபத்துகள் என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் இரவு வேளைகளில் மணல் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த தடை தற்போது நடைமுறையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது