மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள மாலையர்கட்டு கிராமத்தில் விவசாய வேலை செய்யும் போது இன்று 15-04-2021 பி.ப 3.00 மணிக்கு 32 வயதுடைய ஒரு பிள்ளைகளின் தந்தை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது....
தற்போது அப்பகுதியில் சிறுபோக வேளாண்மைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் வயலில் வேலை செய்து கொண்டு வருகின்றனர். மாலை வேளை பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்திருந்தது.
இந்நிலையில் மாலையர்கட்டு கிராமத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது மின்னல் தாக்கிவயலில் வேலை செய்து கொண்டிருந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான மாலையர்கட்டு கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மோகனசுந்தரம் எனும்விவசாயி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.