முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்து



திருகோணமலை - ஹொரவ்பொத்தான பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கணவர் மற்றும் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து இன்று 27-04-2021 ம் திகதி பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிண்ணியாவில் இருந்து மன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதிக்குத் தூக்கம் ஏற்பட்டமையால் வீதியை விட்டு முச்சக்கர வண்டி விலகியதால் விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது .

இவ்விபத்தில் மன்னார் - எருக்கலம்பிட்டி, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த எம்.ஐ.எம்.பர்ஜுன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

19 90 அவசர ஆம்புலன்ஸ் வண்டி மூலமாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை