பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், நீதவான் நீதிமன்றில் அவர் நேற்று மாலை முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் நீதவான் சதீஸ்கரன் மணிவண்ணனை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.