வெருகல் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் இந்த நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெருகல் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
2004ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வெருகல் ஆற்றுப்பகுதி ஊடாக ஊடறுத்த விடுதலைப்புலிகளின் தாக்குதலில் உயிரிழந்த போராளிகளை நினைவுகூர்ந்து வெருகல் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்படுகின்றது.