நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்.


கனவரை கைது செய்து மனைவி மற்றும் குழந்தைகளை மணி கணக்கில் காக்க வைத்த கொடூரம்!
மட்டக்களப்பில் என்னை கைது செய்ய வைத்தும் என் மனைவி மற்றும் குழந்தைகள் மணித்தியால கணக்கில் பொலிஸ் நிலையத்திலும் நீதி மன்ற வாசலிலும் உணவு கூட இல்லாமல் ரிப்பி ரிப்பியை உண்ண வைத்த பெருமை மட்டக்களப்பு மாநகர ஆணையாளரையே சேரும் என கைது செய்யப்பட நபர் மூகநூலில் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.

மேலும், தயாபரன் அவர்களையும் அவர் பின்னால் இருக்கும் அரசியல் பவருக்கும் வாழ்த்துக்களையும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எனக்கும் என் குழந்தைகளுக்கும் என் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறி எனக்காக நீதிமன்றம் வரை வந்து என்னை பிணையில் எடுக்க அயராத முயற்சி எடுத்த கௌரவ மேயர் சரவணபவான் ஐயா மற்றும் பிரதி மேயர் சீலன் அண்ணன் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஐயா மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் மதன் மற்றும் பூபாலப்பிள்ளை அனைவருக்கும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கைது செய்யப்பட்டதை அறிந்த சமுகசேவையாளர் கல்முனை லிங்கேஸ் அண்ணன் பொலிஸ்நிலையம் வந்து விசாரித்ததோடு ஆறுதல் கூறி மன வேதனையடைந்தார் அவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்
புதியது பழையவை