உரிமையாளர்கள் இல்லாத பேஸ்புக் கணக்குகள் தடை


நாட்டில் இயக்கப்படும் சுமார் 1,000 அங்கீகரிக்கப்படாத பேஸ்புக் கணக்குகளை கட்டுப்படுத்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த பேஸ்புக் கணக்குகளுக்கு இன்றுவரை உரிமையாளர்கள் இல்லை, எனவே இதுபோன்ற கணக்குகள் விரைவில் செயலிழக்க புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தண்டனைச் சட்டத்தில் உள்ள விதிகளின் அடிப்படையில் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சமூக ஊடக தளங்களை கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரே ஒரு பேஸ்புக் கணக்கை மட்டுமே இயக்க ஒரு நபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போது இதுபோன்ற பல கணக்குகள் ஒரு நபரால் இயக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை