கினிகத்தேனை, எபடீன் நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த சிலர் நீராடிய போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு - வௌ்ளவத்தையை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.