சுமந்திரனை உடன் நீக்குங்கள் - தவராசா கடிதம்


கட்சியில் நான் இணைக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான உங்களிடம் ஒரு போதும் எந்தவிதமான வேண்டுகோள்களையும் நான் முன்வைத்தவனல்ல, முன்வைக்கப் போறவனுமல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும்,

ஆனால் தமிழ்த் தேசியத்தின் வலிமையான இருப்பின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு கீழ் காணும் வேண்டுகோள்களை முதலாவதும் இறுதியுமான வேண்டுகோள்களாக முன்வைக்கின்றேன்.

எனது வேண்டுகோள்களை கருதிற்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் தீர்க்கமான முடிவை எடுக்காவிடின் தமிழ் தேசியத்தினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் எதிர்காலம் கேள்விக்குறியாகும்
புதியது பழையவை