முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூன்று ரௌடிகள் வசமாக மாட்டிக் கொண்டனர்.
உண்ணாப்புலவு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மீது வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த நிலையில்இ வீட்டு உரிமையாளர் மீது தூள் வீசிவிட்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை வீதியால் சென்ற இளைஞர் ஒருவர் சம்பவத்தை அவதானித்துள்ளார்.
உடனடியாக ஊர்மக்களை அழைத்துள்ளார். இதையடுத்துஇ இரண்டு ரௌடிகள் தப்பிச் செல்ல முற்பட்ட வேளை மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இவர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மூவரிடமும் விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.