தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஏ. சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (30) காலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருக்கும் போதே இந்த விபத்துக்கு சம்பவித்துள்ளது.
மீள பயன்படுத்த முடியாதளவிற்கு வாகனம் சேதமடைந்துள்ளதாகவும் வாகனத்தில் இருந்தவர்களுக்கு தெய்வாதீனமாக எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என தெரியவருகிறது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் வழக்கில் முன்னிலையாக பயணித்து கொண்டிருக்கும் போதே விபத்து ஏற்பட்டது.
அதிவேக நெடுஞ்சாலையில் மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் வழுக்கி விபத்து,உருண்டு பிரண்டுள்ளது.
இதன் பின்னர் பிறிதொரு வாகனத்தில் கல்முனை நோக்கி பயணத்தை தொடர்ந்துள்ளார்.
குறித்த அதி வேக நெடுஞ்சாலையில் வேறு ஒரு வாகனமும் விபத்திற்குள்ளாகியுள்ளது.