கிளிநொச்சியில் கொரோனா வேகமாக பரவும் அபாயம்!


கிளிநொச்சியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம் காணப்படுகின்றது.

கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நிலையில் மக்கள் நடமாடி வருகின்றனர்.

இன்று காலை முதல் கிளிநொச்சி பொலிஸார் முகக்கவசம் அணியாது நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவித்தலை ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொது மக்கள் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் கவலையின்றி செயற்பட்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் முன்பாக இவ்வாறு பெருந்திரளான மக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்திருந்தமையும் குறிப்பிடதக்கது.
புதியது பழையவை