பாகிஸ்தான், கட்டார், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து மத போதகர்கள் இலங்கைக்குள் நுழைய அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நாடுகளிலிருந்து கடந்த 2005ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 1800 மத போதகர்கள் இலங்கைக்கு வந்துள்ளதோடு இவர்களை அழைத்து வந்த 32 அமைப்புகள் தொடர்பாக அரச புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
