இளம் தாய் தூக்கிட்டு மரணம்.



மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ்பிரிவில் உள்ள
தெய்வேந்திரன் தெய்வலோஜினி 21 வயது இளம் தாய் தூக்கிட்டு மரணம்
11 மாத ஆண் குழந்தையொன்றின் தாயே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
கணவரின் வருமானம் கானாததால் அவரோடு முறன்பட்ட, இவர், தனது குழந்தையை அன்போடு தூக்குவதற்குக்கூட கணவருக்கு அனுமதி வழங்காமலிருந்துள்ளார்.

நேற்று மாலை குழந்தையை தூக்குவதற்காக. கணவர் சென்றபோது, கொடுக்க மறுத்ததால், மனைவியை கடுமையாக ஏசியிருக்கிறார்.

இதனால் மனஉளர்ர்சிக்குள்ளான நிலையில் நேற்றிரவு 07.00 மணிக்கெல்லாம் குழந்தையுடன் நித்திரை செய்துள்ளார்.
இரவுச்சாப்பாட்டை உட்கொள்ள கணவர் அழைத்த போது, எனக்கு பசியில்லை, நீங்க சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் நித்திரை செய்துள்ளார்.

கணவரும் இரவுச்சாப்பாட்டை உட்கொண்டு விட்டு மனைவி குழந்தை ஆகியோர் உறங்கிய இடத்திலேயே உறங்கியுள்ளார்.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்த தந்தைக்கு, தனது நெஞ்சில் கைவைத்து குழந்தை அழும் சத்தம் கேட்டதும், எழுந்து மனைவியை பார்த்தபோது காணாத நிலையில் அன்னார்ந்து பார்த்தபோது மின்விசிறியில் சாறியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மனைவி மரணித்திருப்பதை அவதானித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரனையினை கரடியனாறு பொலிசார் மேற்கொன்டு வருகின்றனர்.

புதியது பழையவை