சிறுமியை அழைத்து சென்ற இளைஞன் கைது


முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 வயது சிறுமி ஒருவரை அழைத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு நகரத்தை அண்மித்த பகுதி ஒன்றில் வசித்து வருகின்ற 12 வயது சிறுமி ஒருவரை 19 வயது இளைஞன் ஒருவர் அழைத்துச் சென்றிருக்கின்றார்.

இந்நிலையில் குறித்த யுவதியின் பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இருவரும் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 வயது சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்ற முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
புதியது பழையவை