பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் புகழ் பாடும் ' பக்தி இசையமுதம்' இறுவட்டு வெளியீடு 15.04.2021 வியாழக்கிழமை பட்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது.
ஆலய நிர்வாக சபையினர் மற்றும் பட்டிருப்புக் கிராமத்தின் சங்கங்கள், கழகங்கள், அமைப்புக்கள் அனைத்தினதும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேசகீர்த்தி, சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களுக்கு முதல் இறுவட்டினை வழங்கிவைத்து வெளியீடு செய்தனர்.
ஆசிரியர் வி.ரவீந்திரமூர்த்தி அவர்களின் தயாரிப்பிலும் கிளிநொச்சி இசைக்கபி இசைக் கலையகத்தின் இசையமைப்பாளர் ஈழத்தின் இசைத்தென்றல் பி.எஸ். விமல் அவர்களின் இசையமைப்பிலும் தாயகத்தின் புகழ்பூத்த பாடகர்களின் காந்தக் குரலிலும் உருவான இவ்விசைத் தொகுப்பில் உள்ளடங்கியுள்ள 11 பாடல்களில் 9 பாடல்களை ஆசிரியர்.வி.ரவீந்திரமூர்த்தி அவர்களும் ஏனைய இரு பாடல்களில் ஒன்றினை ஓய்வு நிலை அதிபர் வே.கிஸ்ணன் அவர்களும் மற்றய பாடலினை சிவஸ்ரீ இரா.கு.கோபாலசிங்கம் குருக்கள் அவர்களும் எழுதியுள்ளார்கள்.