மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எருவில் கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டுக்கு இரண்டு விசேட தேவையுடைய சகோதரர்கள் வாழ்கின்ற குடும்பத்துக்கு வீடு ஒன்று அமைத்து வழங்கப்பட்டள்ளது.
மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள காந்தி புரம் கிராமத்தில் உள்ள குடும்பத்துக்கும்
எம் கடமை உறவுகள் அமைப்பினால் இந்த வீடு அமைக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டில் வாழும் கதிர்காமநாதன்- அருளம்பலம் மற்றும் சற்குணகுமார் சந்திரவதி குடும்பத்தினர்(கனடா பிரம்ரன்)ஆகியோரின் முழு நிதி பங்களிப்புடன் வீடு கட்டுவதற்கான முழு கட்டுமான பணிகளையும் எம் கடமை உறவுகள் அமைப்பு முன்னெடுத்தது.