சுகாதார நடைமுறைகளைப் பேணாதவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை!



மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளைப் பேணாதவர்களை அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தும் செயற்பாடுகள், இன்று (28) முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு நகருக்குள் வருவோரும் செல்வோரும் சுகாதார நடைமுறைகளைப் பேணும் வகையில் இறுக்கமான கட்டளைகளை சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் வழங்கிவரும் நிலையில், அவற்றை உதாசிக்கும் செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டுவருகின்றனர்.

இதனை கருத்திக்கொண்டு, வீதி சோதனைகளை மேற்கொண்ட பொலிஸாரும் சுகாதார பிரிவினரும் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் முககவசங்களை சரியான முறையாக அணியாதவர்களை மேற்படி அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தினர்.

அத்துடன், மட்டக்களப்பு நகரில் உள்ள வங்கிகளில் கடமையாற்றும் வங்கி உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்தப் பரிசோதனைகள், மட்டக்களப்பு சுகாதார திணைக்களத்தால் மட்டக்களப்பு அரசடி சந்தியில் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரும் சுகாதார பிரிவினரும் இணைந்து சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கச் செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
புதியது பழையவை