மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்துவரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளில் புகைவிசிறும் நடவடிக்கைகளை சுகாதார திணைக்களம் முன்னெடுத்துவருகின்றது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி பகுதியில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் புகைவிசிறும் செயற்பாடுகள்முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் டெங்கு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலையிலும் வாராந்தம் 10பேர் வரையில் இனங்காணப்பட்டுவருவதாகவும் அவற்றினையும் கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.கிரிசுதன் தெரிவித்தார்.