4 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!



ரக்வானை நகரில் சந்தை தொகுதியொன்றில் இடம்பெற்ற தீப்பரவலினால் 4 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன.

நேற்று 01-05-2021ம் திகதி இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த தீப்பரவல் ரக்வானை காவல்துறையினராலும் இரத்தினபுரி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினராலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மொரகாஹேன – கிரிவத்துடுவ பிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடமொன்றில் நேற்று 01-05-2021 ம் திகதி  இடம்பெற்ற தீப்பரவலும் தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதியது பழையவை