மட்டக்களப்பு சிறைச்சாலையில் எழுமாற்றாக இன்று 19-05-2021ம் திகதி 62 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா. மயூரன் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் இருவருக்கு அறிகுறிகள் தென்பட்டதனைத் தொடர்ந்து எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலேயே 44 பேர் தொற்றாள்களாக இனங்கானப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொற்றுக்குள்ளானவர்களை கொழும்பில் உள்ள சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.