ஆரையம்பதியிலுள்ள தனியார் மருத்துவ ஆய்வுகூடம் ஒன்றில் தாதியர் ஒருவர் மீது பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த இரத்த பரிசோதனைக்கு சென்ற இளைஞன் ஒருவரை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை (19) உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்திலுள்ள மருத்துவ ஆய்வுகூட நிலையம் ஒன்றில் சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை 6 மணிக்கு இரத்த பரிசோதனைக்கு சென்ற 27 வயதுடைய இளைஞன் இரத்தத்தை பரிசோதனைக்காக பெற்றுக்கொண்ட பெண் தாதி ஒருவர் மீது பாலியல் சேட்டை விட முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண்தாதியர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த இளைஞனை பொலிசார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன் முன்னிலைப்படுத்தியபோது அவரை எதிர்வரும் 1 திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.