மட்டக்களப்பு கொவிட்தடுப்பு நிலையத்தில் 4 பேர் மரணம்


கொவிட் தொற்றுக்குள்ளாகி மட்டக்களப்பு கொவிட் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் 15 ஆம் திகதி நேற்று சனிக்கிழமை மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய காத்தான்குடி கிண்ணியா ,மட்டக்களப்பு, பெரிய ஊறணி, நாவற்குடா பகுதிகளைச் சேர்ந்த நபர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்

இதன் காரணமாக இறந்த நபர்கள் வசித்த பிரதேசம் இன்று 16ம் திகதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்
புதியது பழையவை