யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நினைவுச் சுடரேற்றி அஞ்சலி


யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலை வளாகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று 18 அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடத்தப்படும் என்பதால் நேற்று பிற்பகல் முதல் பல்கலைக்கழக சூழலில் இராணுவத்தினர், பொலிஸார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தடைகளைத் தாண்டி பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலை வளாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
புதியது பழையவை