வெசாக் பண்டிகையினை முன்னிட்டு வெளிப்புற நிகழ்வுகள் மூலம் கொண்டாட எந்த அனுமதியும் வழங்கப்படாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் வெசாக் பண்டிகையினை கொண்டாடலாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் இராணுவத் தளபதி வலியுறுத்தினார்.