மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருவப்பங்கேணியில் 58 கேரளா கஞ்சா பக்கட்டுகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார்.
நேற்று 14-05-2021ம் திகதி மாலை மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் கீழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி இளைஞரைக் கைது செய்தபோது அவரது காற்சட்டைப் பையிலிருந்து 58 பக்கட் கேரளா கஞ்சாவையும் 2350 ரூபாய் பணம் ஒரு கையடக்க தொலைபேசி என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பொருட்கள் என்பன மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.