திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியில் இன்று 22-05-2021ம் திகதி அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தியும், திருகோணமலை நோக்கி புறப்பட்ட வானொன்றும் நேருக்கு நேர் மோதியே விபத்து சம்பவித்தள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பலகாமம் 99 ஆம் கட்டை பகுதியில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தில் வான் சாரதியான கண்டி வீதி, 5ஆம் கட்டை சீனக்குடா பகுதியை சேர்ந்த 28 வயதுடை விராஜ் மதுசங்க என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


