திருகோணமலை தம்பலகாமத்தில் டிப்பர் வாகனம் விபத்து


திருகோணமலை தம்பலகாமம் கோவிலடி வீதித் தடையினை தாண்டி வேகமாக வந்த டிப்பர் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன் பார ஊர்தியில் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று 2021.05.21 நள்ளிரவு 2.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவிலடியில் வீதி தடை ஏற்படுத்தி இராணுவத்தினர் கிண்ணியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மீன் பார ஊர்தியை சோதனை செய்து கொண்டிருந்தார்கள்.

அவ்வேளையில் வேகமாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மீன் ஏற்றி வந்த பார் ஊர்தியில் பின்புறமாக மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. சாரதி படுகாயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
புதியது பழையவை