திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதியின் பம்மதவாச்சி பகுதியில் பஸ்ஸொன்று, இன்று 03-05-2021ம் திகதி அதிகாலை 4 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படு காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இந்த விபத்துக்கு பிரதான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றதென பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.