சுவாமி விபுலானந்தரின் 129வது ஜனனதினம்.


மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தரின் 129வது ஜனனதினம்.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 129 ஆவது ஜனனதின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் உள்ள சுவாமி விபுலானந்தர் நீரூற்று பூங்காவில் மட்டக்களப்பு மாநகர சபையினரால் அனுட்டிக்கப்பட்டது.

முத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ் பேராசிரியருமான சுவாமி விபுலாநந்தரின் ஜனனதினம் இன்று நாடு பூராக கொண்டாப்படும் நிலையில் மட்டக்களப்பில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. இதன்கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை பிரதிநிதிகள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது சுவாமி விபுலானந்தரின் திருவுருவசிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டதுடன் பக்தி கீதமும் இசைக்கப்பட்டது.
புதியது பழையவை