பாதணியில் மறைத்து ஐஸ் போதைப்பொருள் கடத்திய வியாபாரியொருவர் இன்று 27.05.2021 ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து போதைப்பொருள் பக்கெற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கட்டுப்பாடு அமுல் செய்யப்பட்டிருந்தவேளையில் இவர் காத்தான்குடி பகுதியிலிருந்து வாழைச்சேனை நோக்கி கர்ப்பிணியான தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தபோது ஏறாவூர் மணிக்கூட்டுக்கோபுரச்சந்தியில் கடமையிலிருந்த பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது மிக நுட்பமான முறையில் பாதணியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப்பொருள் பைக்கற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
37 வயதுடைய இவர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
சந்தேகநபர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்யப்படவுள்ளார்