ஜனாதிபதி விடுத்துள்ள உடனடி உத்தரவு


சீன அரசாங்கம் நேற்றையதினம் வழங்கிய இரண்டாவது தொகுதி கொவிட் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ளார்.

இதன் பிரகாரம், சுகாதாரப் பிரிவினரின் பரிந்துரையின் கீழ், சில மாவட்டங்களுக்கு இந்தத் தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

சீன அரசாங்கம் இரண்டாவது கட்டமாக அன்பளிப்பு செய்திருக்கும் ஐந்து லட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நேற்று 26-05-2021 ம் திகதி அதிகாலை நாட்டை வந்தடைந்தன. இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஸென் ஹான்ட், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் தடுப்பூசிகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சீன அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு அமைவாக இரண்டாவது தொகுதி தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதேவேளை, அரசாங்கம் கொள்வனவு செய்வதற்கு கோரியுள்ள இரண்டு மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை இன்னும் ஒரு மாத காலப்பகுதிக்குள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தடுப்பூசிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் சீனத் தூதுவர் தெரிவித்தார்.
புதியது பழையவை