ஊடகவியலாளர் உட்பட இருவருக்கு கொரனா தொற்று


மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றினை தடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் பொதுச்சுகாதார பிரிவினரால் அன்டிஜன் மற்றும் பீசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு சுகாதார பணிமனைக்குட்பட்ட பகுதியில் சடுதியாக அதிகரித்துவரும் கொரனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் இன்று காலை மட்டக்களப்பு பிரதான சந்தைத்தொகுதியில் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் சுகாதார பிரிவினரால் மட்டக்களப்பு பொலிஸாரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டன.

பொதுச்சந்தையில் விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலருக்கும் இன்று ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு பொதுச்சந்தையில் 60பேருக:கு நடாத்தப்பட்ட இந்த பரிசோதனையில் ஊடகவியலாளர் ஒருவரும் வியாபாரி ஒருவருமாக இருவர் கொரனா தொற்றுக்குள்ளானது கண்டறியப்பட்டது.

புதியது பழையவை