தனியார் தொழிற்சாலையின் ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி




குருநாகலை மாவட்டத்தின் துல்ஹிரிய பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையின் ஊழியர்கள் 400 பேருக்கு ஒரே தடைவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியான ஆய்வுகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்க்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவினால், தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகிர்த்திக்கு இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொழிற்சாலைகளில் கொரோனா தடுப்புக்கான சிறப்பு குழுவொன்று அமைக்கபட்டு, உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு நிறுவன உரிமையாளர்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், ஒரே தடைவையில் பெருமளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையானது கண்டிக்கத்தக்க விடயமாகுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தனியார் நிறுவனத்தில் கொரோனா தடுப்பு குழு அமைக்கப்பட்டதா மற்றும் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பன குறித்து உடனடியாக ஆராயுமாறு அமைச்சர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

மேலும், நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் சேவை நிலையங்களில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றுவதற்கு கொரோனா தடுப்பு குழு ஒன்றை அமைத்து செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சேவை நிவாரணம் மற்றுத் விடுமுறை நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தொழில் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை