இலங்கையின் தற்போதைய கொவிட் நெருக்கடி நிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மருத்துவ சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் சங்கம் மற்றும் எஸ்எல்எம்ஏ இன்டர்கொலேஜியேற் குழு ஆகியன கூட்டாக இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
ஜனாதிபதியிடம் மருத்துவர்கள் ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அவை விரைவில் செயற்படுத்தப்பட வேண்டுமென்றும் கருதுகின்றனர்.