மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அனைத்து மக்களின் நன்மை கருதி 01.05.2021 ம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரும் வரை அடியார்கள் ஆலயத்தினுள் உட்சென்று வழிபடுதற்குத் தடை
நாட்டின் Covid - 19 திடீர் தாக்கங்களின் நிமிர்த்தம் பட்டிப்பளை பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் பட்டிப்பளை வைத்திய அதிகாரி அதன் உத்தியோகத்தர்கள் ஆலயங்களின் அறங்காவலர்கள் கலாச்சார உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் புதிய சுற்று நிருபத்திற்கமைவாக கலந்து கொண்டு பல ஆலோசனையின் நிமிர்த்தம்.
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்று விளங்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அனைத்து மக்களின் நன்மை கருதி இன்று 01.05.2021 ம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரும் வரை அடியார்கள் ஆலயத்தினுள் உட்சென்று வழிபடுவது தடைசெய்யப்பட்டு பூசைகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறுவதற்கு குருக்கள்மார் அதன் பணியாளர்கள் நிருவாகசபை பூசை உபயகாரர்கள் மாத்திரம் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.