மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி


ஆனமடுவ தோனிகல பகுதியில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு பெண் ஆனமடுவ வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இன்று 08-05-2021ம் திகதி காலை இடம்பெற்றுள்ள மேற்படி சம்பவத்தில் 26 வயதுடைய இளம் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதிக மழையுடனான காலநிலையின்போது குறித்த பெண் தேங்காய் உறிப்பதற்காக இரும்பு கம்பியொன்றை பயன்படுத்தியுள்ளார்.

இதன்போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அருகிலிருந்த பெண்ணும் மின்னல் தாக்கத்துக்கு இலக்கானமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை